கருங்கல்பாளையம் போலீஸ் சம்மன்… சீமான் ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (பிப்ரவரி 17) தெரிவித்துள்ளார். Seeman reacts police summon

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். Seeman reacts police summon

ஈரோடு நெரிக்கல்மேடு பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், “உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் அந்த வெடிகுண்டை வீசவில்லை. நான் வெடிகுண்டு வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக சீமான் பிப்ரவரி 20-ஆம் தேதி நேரில் ஆஜராக, கருங்கல்பாளையம் போலீசார் இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்திற்கு சென்று அவரிடம் சம்மன் கொடுத்தனர். Seeman reacts police summon

இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது, “என் மீது அனைத்து இடங்களிலும் வழக்கு போட்டு அலையவைத்து மனச்சோர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கெல்லாம் சோர்வடையும் ஆள் நானல்ல. அச்சப்படுகிறவன் முதலில் இந்த களத்திற்கே வரக்கூடாது. என் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள். எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன்.

என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறேன். அதற்கிடையில், சம்மன் கொடுக்கிறார்கள். விக்கிரவாண்டியில் நாளைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் சேலத்தில் ஆஜராக வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று வழக்குகளுக்கு எப்படி ஆஜராக முடியும்? ஒரு ஆள் தானே இருக்கிறேன். ஏஐ தொழில்நுட்பம் மூலமாக என்னை போன்ற நான்கைந்து பேரை அனுப்ப முடியாதல்லவா? அதனால் ஒவ்வொரு வழக்குகளாக தான் ஆஜராக முடியும்” என்று தெரிவித்தார்.

பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் 80 வழக்குகளில் தொடர்ந்து சீமானுக்கு சம்மன்கள் கொடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Se eman reacts police summon

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share