நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்தை நேற்று (நவம்பர் 21) இரவு சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பானது சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது. இந்தநிலையில், மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்திற்காகத் தயாராகி வரும் திடலைப் பார்வையிடுவதற்காக சீமான் இன்று (நவம்பர் 22) மதுராந்தகம் சென்றிருந்தார்.
ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஓசூரில் வழக்கறிஞர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து கேட்டதற்கு “வழக்கறிஞரை வெட்டியவர் மட்டும் குற்றவாளி அல்ல. அதை வேடிக்கை பார்த்தவர்களும் குற்றவாளிகள் தான். சமூகமே குற்றச் சமூகமாக மாறிக்கொண்டிருப்பதைப் பார்த்து நாம் வெட்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
மேலும், ரஜினியை அவர் சந்தித்தது குறித்தும் ரஜினியுடன் அவர் என்ன பேசினார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சீமான் ” ரஜினியுடன் நான் அரசியல் குறித்தும் திரைப்படங்கள் குறித்தும் பேசினேன்” என்று கூறினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பலதரப்பட்ட நகைகள்… இதுதான்யா இந்த இன்விடேஷனில் ஹைலைட்டே!
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி எப்போது?
புஷ்பா – 2: வெளியாகும் மூன்றாவது சிங்கிள்!