நாம் தமிழர் கட்சி சார்பில் தாய் தமிழில் வழிபாடு நடத்தக்கோரி அக்கட்சித் தலைவர் சீமான் தலைமையில் திருப்போரூர் முருகன் கோவிலில் இன்று (செப்டம்பர் 3) தாய் தமிழில் வழிபாடு செய்யப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ”இன்று (செப்டம்பர் 3) தமிழ் மொழி காப்பிற்காக களத்தில் நின்று போராடிய வீரர், இலக்குவனார் அவர்களுடைய நினைவு நாள்.
அவர் நினைவைப் போற்றும் விதமாக, எங்கள் தாய்மொழியில் எங்கள் கோயில்களில் எங்கள் இறைவன் முன்பாக தமிழில் வழிபாடு நடத்தினோம்.
இந்த நாடு என்னுடையது, கோவில் என்னுடையது, தெய்வம் என்னுடையது என் மொழியில் தான் வழிபாடு இருக்க வேண்டும்.
தமிழிலும் அர்ச்சனை செய்யலாம் என்று சட்ட விதிகள் உள்ளது. தமிழிலில் மட்டும் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று சட்டவிதிகள் மாற வேண்டும்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டமியற்றப்பட்டாலும், அதனை முழுமையாக நிறைவேற்ற முடியாத சூழல் தமிழகத்தில் உள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், ஆனால் எந்த மொழியில் அர்ச்சனை செய்யப்படும் என்பது தான் இங்கு முதன்மையானக் கேள்வியாக உள்ளது.
அன்னைத் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் அது தான் முதன்மையானது.
என்னுடன் வந்த தம்பி, தங்கையர்கள் திருப்போரூர் முருகன் கோவிலில், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் பாடும்போது, கோவிலில் இருந்த குருமார்கள் தூய தமிழில் வழிபாடு செய்தார்கள்.
தேவாலயங்களில் தூய தமிழில் வழிபாடு நடைபெறுகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யப்படுகிறது.
தமிழ் இறைக்கு முன்னாள் தமிழில் வழிபாடு செய்ய முயற்சி செய்வோம். அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றி மாற்றுவோம்.” என்று சீமான் காட்டமாக பேசினார்.
செல்வம்
இலவசங்களால் நாடு வளர்ந்திருக்கிறதா? அமைச்சர் பிடிஆருக்கு சீமான் கேள்வி!