நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (செப்டம்பர் 9) காலை நேரில் ஆஜராக போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2011ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில், கட்டாயத்தால் தனக்கு ஏழு முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும், திருமணம் செய்து தன்னை ஏமாற்றிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து அந்த புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் துணை ஆணையர் உமையாள் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திலும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 10.30 மணியளவில் நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், விஜயலட்சுமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்கில் தங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது அவசியமாகிறது. எனவே தாங்கள் R9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை (09.09.2023) 10.30 மணியளவில் நேரில் ஆஜராக இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி கைது!
கொள்ளி போட வேண்டியது மூத்தவனா இளையவனா?