நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சீமான் தன்னை திருமணம் செய்வதாக கூறிவிட்டு ஏமாற்றியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 28) புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயலட்சுமி, “என்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய சீமான் மீது 2011-ஆம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தேன். நான் கொடுத்த புகாரை அதிமுக ஆட்சியில் முறையாக விசாரிக்காததாலும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாலும் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று எழுதிகொடுத்தேன்.
ஆனால் அவர்கள் கூறியபடி சீமான் என்னை திருமணம் செய்துகொள்ளவில்லை. கட்சியில் பெண்களுக்கு மரியாதை கொடுப்பதாக சொல்லும் சீமான் என்னை ஏமாற்றியுள்ளார். சீமானை நிச்சயமாக கைது செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒரு பெண்ணாக நினைத்து எனக்கு ஆதரவு கொடுங்கள். வெளிநாடுகளில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் ஆபாசமாக என்னை பேசுகின்றனர். எனது அம்மாவின் சொந்த ஊர் இலங்கை தான். பிரபாகரன் படத்தை கட்சி கொடியில் வைத்துக்கொண்டு பிரபாகரனை சீமான் இழிவுபடுத்துகிறார்” என்று தெரிவித்தார்.
செல்வம்
2 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்!
கோவாவில் குறையும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை: காரணம் என்ன?