மீனவர்களுக்காக கடல் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெற போகிறது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தேர்தல் நெருங்க நெருங்க வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதில் ராமநாதபுரம் தொகுதியில், அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திறந்தவெளி வாகனத்தில் பலாபழம் சின்னத்துடன் மக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி, முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொளுந்துரை, கடம்போடை, பூசேரி, எஸ்.காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.
மீனவர்களுக்கு உதவும் வகையில் கடலோர கிராமங்களில் பெட்ரோல், டீசல் பங்க் அமைத்துத் தரப்படும், இலங்கையால் கைப்பற்றப்பட்ட 375 படகுகள் மீட்கப்படும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,
மீனவர்களின் உயிர்காக்கும் “கடல் ஆம்புலன்ஸ்” சேவை ஏற்படுத்தப்படும், மீன்பிடி துறைமுகங்கள் அமைத்துத் தரப்படும், திருவாடனை திருக்கோஷ்டியூர் உள்ளிட்ட பல இடங்கள் சுற்றுலாத்தலமாக்கப்படும்,
புதிய ரயில் சந்திப்பு நிலையங்கள் அமைத்துத் தரப்படும், கால்நடை பூங்கா மற்றும் கால்நடை கல்லூரி அமைத்துத் தரப்படும், விமானநிலையம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும்,
ஆழ்துளை கிணறுகள் மூடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார் ஓ.பன்னீர் செல்வம்.
இன்று அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்கும் விக்ரம்?.. மரண மாஸ் அறிவிப்பு!
“தமிழ்நாட்டின் கோரிக்கையை பிச்சை என்கிறார்கள்” : நெல்லையில் ராகுல் பிரச்சாரம்!