வக்ஃபு சட்டத்திருத்த மசோதா: நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்தில் வாக்குவாதம்!

Published On:

| By Minnambalam Login1

scuffle waqf kalyan banerjee

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா குறித்து டெல்லியில் இன்று (அக்டோபர் 22) நடந்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பேனர்ஜீயின் கைகளில் காயம்  ஏற்பட்டது.

வக்ஃபு சட்டத்திருத்த மசோதா 2024-ஐ மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த மசோதா பல தரப்பு மக்களால் விமர்சிக்கப்பட்டதால், மசோதாவை விவாதிக்க 21 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆகஸ்ட் 9-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக பாஜக எம்.பி.ஜக்தாம்பிகா பால் நியமிக்கப்பட்டார்.

இந்த குழு கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னைக்கு வந்து தமிழக கட்சிகளான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகளுடன் கலந்துரையாடியது.

இந்நிலையில், டெல்லியில் இன்று (அக்டோபர் 22) வக்ஃபு சட்டம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது இக்குழுவின்  உறுப்பினர்களான  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பேனர்ஜீ-க்கும்  பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய்-க்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது கல்யாண் பேனர்ஜீ  கோபத்தில் அவர் முன்னிருந்த கண்ணாடி தண்ணீர் பாட்டிலை எடுத்து மேஜை மீது அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவரது வலது கையின் கட்டைவிரலிலும், சுண்டு விரலிலும் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவருக்கு முதலுதவி  சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவரது இந்த நடத்தையால் கூட்டுக்குழு விவாதத்திலிருந்து ஒருநாள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

நாளை வெளியாகும் ‘அமரன்’ டிரெய்லர்!

இவர்களை ஏன் தவிர்க்க வேண்டும்… இர்பானால் நொந்த பெண் டாக்டர்

நாமக்கல்லில் கலைஞர் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share