இன்று (டிசம்பர் 14 ) அமைச்சராகப் பொறுப்பேற்கும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஷெட்யூல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்று காலை 8.45 மணி, ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்ற உதயநிதி 9 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்தார்.
இதையடுத்து 9.30 மணி அமைச்சராகப் பதவியேற்பு உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்.
10.00 மணி – அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.
10.15 மணி தலைமைச் செயலகத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
10.30 மணி – பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
11.00 மணி – பேராசிரியர் இல்லம் செல்கிறார், அங்கிருந்து, 11.30 மணிக்கு கோபாலபுரம் மற்றும் 11.45 மணி சி.ஐ.டி காலனிக்கு செல்கிறார்.