அதிமுக கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அம்மா அவர்களின் பிறந்த நாள் பரிசாக உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் என்றும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதனையடுத்து அதிமுக எடப்பாடி தரப்பைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தீர்ப்பினை வரவேற்று உற்சாகத்துடன் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ”கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவும், கழக இடைக்கால பொதுச்செயலாளராக அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதும் செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு, கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும், எனக்கும் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்த நாள் பரிசாக கிடைத்திருப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தந்துள்ளது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் கழகத்தை கட்டிக்காக்கவும், “ஏழை எளிய மக்களுக்காக எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் தொடர்ந்து பாடுபடும்” என்ற அவர்களின் வாழ்நாள் கனவையும் நிறைவேற்ற
மாண்புமிகு அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்கள் தலைமையில் அணி திரள்வோம்! வென்று காட்டுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தீர்ப்பை நினைத்து இரவெல்லாம் தூக்கமே இல்லை: உருகிய எடப்பாடி
இரட்டை இலை கிடைத்ததால் ஈரோட்டில் வெற்றி பெறுவார்களா? – டிடிவி தினகரன்