குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை இழிச்சொல்லாக பயன்படுத்தியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் போலீசாருக்கு இன்று (ஆகஸ்ட் 29) உத்தரவிட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரையின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரை சண்டாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடினார். இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து தமிழ்நாடு எஸ்சி, எஸ்டி ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சண்டாளன் என்ற சொல்லை அரசியல் மேடைகளில் இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ பயன்படுத்தக் கூடாது. மீறினால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதுதொடர்பாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “நானும் அதே வார்த்தையை கூறுகிறேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள்” என்று ஆவேசமாக சவால் விட்டார்.
தொடர்ந்து பொதுக்கூட்ட மேடையிலும், சண்டாளன் என்ற சொல்லாடலை பயன்படுத்தி அதே பாடலை சீமான் பாடினார். இதற்கு அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட பலர் சீமானுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தனர்.
சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்த திமுக நிர்வாகி அஜேஷ், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து சீமான் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்திற்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”மத கலவரத்தை தூண்டுகிறார்” : முதல்வர் மீது 18 எதிர்க்கட்சிகள் புகார்!
சே… இவர்கள் எவ்வளவு கோழைகள்! மோகன்லால் பற்றி நடிகை பார்வதி
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி….எத்தனை நாள் நீடிக்கும்?