சீமான் மீது பதிவு செய்யப்பட்ட எஸ்சி/எஸ்டி வழக்கில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சமயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சண்டாளன் என்ற ஒரு சமூகத்தின் பெயரை வசை சொல்லாக பயன்படுத்தி முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதலில் இந்த பாடலை அக்கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடியிருந்தார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பாடலை பாடி முடிந்தால் என்னை கைது செய்து பார் என்று சவால் விட்டிருந்தார் சீமான்.
இந்த நிலையில் ஆவடி அருகே பட்டாபிராமை சேர்ந்த அஜேஷ் அங்குள்ள காவல்நிலையத்தில் சீமான் மீது கடந்த ஜூலை 7ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.
இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அஜேஷ் எஸ்சி/எஸ்டி ஆணையத்தில் முறையிட்டார்.
இதையடுத்து பட்டாபிராம் காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக வழக்குப்பதிவு செய்து அதுகுறித்த விவரங்களை அறிக்கையாக செப்டம்பர் 2ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த 29ஆம் தேதி எஸ்சி/எஸ்டி ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி பட்டாபிராம் போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் பட்டாபிராம் காவல் நிலையத்தில் இருந்து எஸ்.சி/எஸ்.டி ஆணையத்தில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், சீமான் மீது பதியப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக உதவி ஆணையர் சுரேஷ்குமார், சீமான் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தவிருப்பதாகவும், அதைத்தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
Paralympics 2024: மல்யுத்தத்தில் இருந்து ஈட்டி எறிதல்… சாதித்த சுமித் அன்டில்
Comments are closed.