SC dismisses EDs plea

ஹேமந்த் சோரன் ஜாமீன்: ED மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

அரசியல்

ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிற்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து அமலாக்கத்துறை தொடுத்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். SC dismisses EDs plea

சரியான காரணத்தின் அடிப்படையில் தான் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனிற்கு ஜாமீன் வழங்கியுள்ளது  இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்தனர்.SC dismisses EDs ple

அதேநேரம் உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவு விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஹேமந்த் சோரனிற்கு அளித்த ஜாமீனை எதிர்த்து அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு இன்று (ஜூலை 29) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை,   “சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு  சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனிற்கு எதிராக எந்தவித முதன்மையான ஆதாரமும் இல்லை என்ற  ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முடிவு தவறானது” என்று வாதிட்டது.

மேலும், “அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிக்கையில், ஹேமந்த் சோரனின் பெயரில் 8.86 ஏக்கர் நிலம் ராஞ்சியில் இருக்கிறது எனவும்,  அதை விசாரிக்கச் சென்ற அதிகாரிகளை  எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி ஹேமந்த் சோரன் பயம் காட்ட முயன்றார் எனவும்” இருப்பதை குறிப்பிட்டு வாதாடியது அமலாக்கத்துறை.

ஹேமந்த் சோரன் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபல் “ சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் 19-ஆம் பிரிவின் கீழ் ஹேமந்த் சோரனை கைது செய்ய தேவையான ஆதாரங்கள் அமலாக்கத்துறையிடம் இல்லை.  வலுக்கட்டாயமாக நிலத்தைப் பறிப்பது அல்லது முறைகேடாக நிலம் வாங்குவது போன்ற குற்றங்கள் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் வராது” என்று வாதிட்டார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன்  கடந்த ஜனவரி 31-ஆம் தேதி  அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார். அதன் காரணமாக அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.

அதற்குப்பின், சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஹேமந்த் சோரனிற்கு  ஜாமீன் கிடைத்தவுடன், சம்பாய் சோரன் முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார்.

இதற்குப் பின் மீண்டும் ஹேமந்த் சோரன் முதலமைச்சராக  ஜூலை 4-ஆம் தேதி பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

-அப்துல் ரஹ்மான்                 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

மருத்துவரின் கண்டனம்…. சர்ச்சைப் பதிவை நீக்கிய நயன்தாரா

இந்தியாவிற்கு வரும் ஆப்பிரிக்க சிறுத்தைகள் !

மோடியின் தாமரை வியூகத்தில் நாடு சிக்கியிருக்கிறது: ராகுல் தாக்கு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *