திகார் சிறையில் வெரைட்டி உணவு: அமைச்சரின் அடுத்த வீடியோ!

அரசியல்

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யும் வீடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அவர் சிறையில் வெரைட்டி உணவுகளை சாப்பிடும் புதிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறையில் முறையான உணவு இல்லாமல் 28 கிலோ எடை குறைந்துவிட்டதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தரப்பில் நீதிமன்றத்தில் புகார் எழுப்பப்பட்டது. ஆனால், திகார் சிறையில் பழங்கள், சாலட், உணவுகள் என வகைவகையாக சத்யேந்திர ஜெயின் சாப்பிடும் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சிறையில் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு முறையான உணவுகள் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இந்த சிசிடிவி காட்சிகள் அனைத்தும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எடுக்கப்பட்டவை, அமைச்சர் 28 கிலோ உடல் எடை குறையவில்லை. மாறாக 8 கிலோ எடை அதிகரி்த்துள்ளார் என சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகின. சத்யேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உண்மையில் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் 2021 ஆம் ஆண்டு ஜேபி காலான் பகுதியில் மைனர் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவழக்கில் தண்டனை பெற்ற கைதி எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே கடும் வார்தைப் போர் உருவாகியது. இரு தரப்பும் கடுமையாக விமர்சித்தன. டெல்லி நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராகுல் மெஹ்ரா “ கடந்த மே 31 ஆம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு முறையான உணவுகள் வழங்கப்படவில்லை.

கடந்த 12 நாட்களாக ஜெயின் மதரீதியாக சத்யேந்திர ஜெயின் விரதம் இருந்து வருகிறார். மருத்துவப் பரிசோதனையும் நடக்கவில்லை. சிறை நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் சத்யேந்திர ஜெயின் உடல் எடை 28 கிலோ குறைந்துவிட்டது. சிறையில் சிறப்பு சலுகைகள் சத்யேந்திர ஜெயினுக்கு வழங்கப்படுகிறது என்பது பொய்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திகார் சிறையில் இருக்கும், சத்யேந்திர ஜெயினுக்கு, பழங்கள், சாலட், உணவுகள், போன்றவை சாப்பிடத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகள் புதிதாக வெளியாகியுள்ளன. இதனால், சத்தியேந்திர ஜெயின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சொகுசு வீடு..சிக்கலில் மாட்டிய யுவராஜ் சிங்

வளரும் பாஜக… தேயும் அதிமுக: ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஜெ. உதவியாளர் பூங்குன்றன்

+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.