புல்வாமா தாக்குதல்: “மத்திய அரசு கடமை தவறிவிட்டது”: சரத்பவார்

அரசியல் இந்தியா

புல்வாமா தாக்குதலில் நம் நாட்டை காக்க வேண்டிய மத்திய அரசு அதன் கடமையிலிருந்து தவறிவிட்டது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் Wire பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அளித்த நேர்காணலில், ”2019-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டது.

சிஆர்பிஎஃப் வீரர்கள் பயணிக்க விமானம் வழங்க வேண்டும் என்று நான் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கோரிக்கை வைத்தபோது அதனை மறுத்துவிட்டனர்.

இது குறித்து யாரிடமும் பேசக்கூடாது என்று அவர்கள் என்னிடம் கூறினர்” என்று தெரிவித்தார்.

அவரது கருத்து இந்திய அரசியலில் மிக முக்கியமான விவாதமானது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புல்வாமா தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் ராணுவ வீரர்கள் இறந்த விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “புல்வாமா தாக்குதலில் மத்திய அரசின் நிர்வாக தோல்வியை சத்யபால் மாலிக் மக்கள் மத்தியில் எடுத்துரைத்துள்ளார்.

நம் ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். புல்வாமா தாக்குதல் குறித்து மத்திய அரசு எந்த ஒரு விசாரணையும் நடத்தவில்லை.

நம் நாட்டை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு அதன் கடமையிலிருந்து தவறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் குறித்து சரத்பவார் பேசியுள்ளது அரசியல் அரங்கில் மிக முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது.

நேற்று மும்பை சில்வர் ஓக் பகுதியில் சரத் பவாரை அவரது இல்லத்தில் கெளதம் அதானி சந்தித்து ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.

அதானி குழுமம் பங்குச்சந்தை மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டு என்று கோரிக்கை வைத்த நிலையில், சரத் பவார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த சூழலில் கெளதம் அதானியை சரத் பவார் அவரது இல்லத்தில் சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

செல்வம்

சென்னை ஐஐடி: 4 மாதத்தில் 4 மாணவர்கள் தற்கொலை!

“சிறுபான்மை மக்களுக்கு திமுக அரணாக இருக்கும்”: முதல்வர் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *