சசிகலா சேலம், ஈரோடு, தஞ்சை, நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில், பேரறிஞர் அண்ணாவின் 114ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்த நகரில் உள்ள அவரது இல்லத்தில் அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “அண்ணாவின் பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக இணைந்து அதிமுகவை வெற்றிக்கு எடுத்துச் செல்வார்கள்.
அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து வருகிற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். திமுக அரசு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது நல்லதல்ல. மக்களுக்கான அந்த திட்டங்களை மீண்டும் திமுக அரசு கொண்டு வர வேண்டும்.
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம் என்று ஓபிஎஸ் கூறியது சரியானது தான்.

அதிமுகவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தொண்டர்களும் அதனைத் தான் நினைக்கிறார்கள். அதற்கு மற்றவர்களும் ஒத்துழைப்பு தருவார்கள்.” என்ற அவரிடம், நீங்கள் எப்பொழுது ஓபிஸை சந்திப்பீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “நாங்கள் எல்லோருமே ஒன்றாகத் தானே உள்ளோம்.
தமிழக அரசில் நிறைய தவறுகள் நடக்கிறது அதனை அவர்கள் சரிசெய்ய வேண்டும். அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நேரம் வரும்போது நிச்சயமாக செல்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செல்வம்
அண்ணா, பெரியாரை வைத்து பிழைக்கிறது திமுக : டிடிவி தினகரன்