சசிகலாவின் மழை நிவாரணம்: தடுத்து நிறுத்திய ஸ்டாலின்

அரசியல்


சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சசிகலா நிவாரணம் வழங்க இருந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.

கடந்த நவம்பர் 4ஆம் தேதி மாலை சென்னை தி நகர் வாணி மஹாலில் எம் ஜி ஆர் அறக்கட்டளைத் துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விழாவைத் துவக்கி வைத்த எடப்பாடி பழனிசாமி, தமிழக திரைத்துறையில் நலிந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.


அதே நாளில் ஆர்கே நகர் தொகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணம் வழங்க சசிகலா திட்டமிட்டிருந்தார். இறுதியில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து சசிகலா தரப்பிடம் விசாரித்த போது, “மழை பெய்தாலும், பெரும்பாலும் தண்ணீர் தேங்கி நிற்கவில்லை. மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு மழைநீர் தேங்காத அளவுக்குப் பார்த்துக்கொண்டனர்.

இந்தச்சூழலில் நிவாரணம் கொடுப்பது சரியாக இருக்காது என்று சசிகலாவைச் சந்தித்து அவருக்கு நெருக்கமான சில முக்கிய ஆதரவாளர்கள் கூறினர். இதனால் நிவாரணம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்துவிட்டார்” என்றனர்.

மழைநீரை உடனடியாக அகற்ற முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்ததன் மூலம், வெள்ளத்தை மட்டுமல்ல சசிகலா உள்ளிட்ட அரசியல்வாதிகளின் நிவாரண உதவி திட்டத்தையும் தடுத்து நிறுத்திவிட்டார்.

-வணங்காமுடி

ஆர்.எஸ்.எஸ் பேரணி – பின்வாங்கிய காரணம் இதுதான்: திருமாவளவன்

துண்டான ரயில் பெட்டிகள் இணைப்பு : விசாரணைக்கு உத்தரவு!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0