சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா: ஜெயக்குமார் விமர்சனம்!

அரசியல்

சசிகலாவுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம், அதனால் தான் தன்னை ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு பேசிக்கொண்டிருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ்  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “அண்ணாவை ஒருமையில் திட்டி அவரது பிறப்பை கேலி செய்து காங்கிரஸ்காரர்கள் சுவரில் எழுதினார்கள்,

அண்ணா தனது தம்பிகளை அமைதிப்படுத்தி மெழுகுவர்த்தி வெளிச்சம் காட்டி அதை மக்களுக்கு தெரியப்படுத்துமாறு கூறினார் .

அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் திமுக அரசு, அரசியலில் நாகரிகம் பண்பாடு இன்றி எதிர்க்கட்சிகளை ஒடுக்க,

புழுதிவாரி தூற்றி நாகரிகமற்ற அரசியலை செய்கிறது. அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை.

திமுகவினர் கம்பி கட்டும் வேலையை நன்றாக செய்கின்றனர்.  திட்டங்களுக்கான பெயர் சூட்டு விழா மட்டுமே பிரமாண்டமாக  நடக்கிறது.

எனது துறைக்கு  இயக்குநராக இருந்தவர். தற்போதைய தலைமை செயலாளர் இறையன்பு.

எனவே அவரது கைவண்ணம் எனக்கு தெரியும். ஸ்டாலின் பாடுவது எல்லாம் அவரது கைவண்ணம் தான். அவர் எழுதிக் கொடுத்ததை ஸ்டாலின்  பேசுகிறார்.

நரிக்குறவரை பழங்குடியினர்  பட்டியலில் சேர்க்க முதல்முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தவர் ஜெயலலிதா.

ஆனால் திமுக தாங்கள்தான் காரணம் என கூறுகின்றனர். மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது அதிமுக. இன்றுவரை திமுக அதற்கு குரல் கொடுக்கவில்லை.

மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் , பழைய ஓய்வூதியம் , நீட் உள்ளிட்ட தேர்தல் பிரசாரங்களை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை.

ஜெயலலிதாவை பார்ப்பது போல மக்கள் தன்னை பார்ப்பதாக சசிகலா கூறுவது தவறு.  சசிகலாவிற்கு சென்ஸ் ஆப் ஹூயுமர் அதிகம், சிரிக்காமல் ஜோக் அடிப்பவர் சசிகலா , மடுவுக்கும் மலைக்குமான வித்தியாசம்தான் ஜெயலலிதாவுக்கும்  சசிகலாவுக்கும் இடையே இருப்பது.

இந்த ஆட்சியில் முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினும் , மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கும் மா. சுப்பிரமணியனும் விளம்பரப்பிரியர்கள்.

இருவரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள தினந்தோறும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் மருத்துவமனைகளில் பிபி , சுகர்  மாத்திரைகள் இல்லை. ஸ்வைன் ப்ளூ காய்ச்சலால் சென்னை , புறநகர் பகுதி அதிகமாக பாதிக்கப்பட்ட போதும் கட்டுப்படுத்த  அரசு   முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை ” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

கலை.ரா

அண்ணா பிறந்தநாள் : தலைவர்கள் மரியாதை !

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *