7 ஆண்டுகளுக்குப் பிறகு கொடநாடு செல்லும் சசிகலா

Published On:

| By Monisha

7 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகலா இன்று (ஜனவரி 18) கொடநாடு செல்கிறார்.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு காவலாளி ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.  பங்களாவில் உள்ள சில ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஒட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உட்பட 11 பேர் நீலகிரி மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகிய இருவரும் கொடநாடு பங்களாவுக்கு சென்று வந்தனர். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா கொடநாடு செல்லாமல் இருந்து வந்தார்.

இந்தநிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜனவரி 18) மாலை சசிகலா கொடநாடு பங்களாவிற்கு செல்கிறார்.

கொடநாடு பங்களாவிற்கு முன்பு ஜெயலலிதாவின் சிலையை வைப்பதற்கான பூமி பூஜை நாளை (ஜனவரி 19) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர் காரில் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு புறப்பட்டார்.  இன்று இரவு அங்கு தங்க உள்ள சசிகலா, நாளை பூமி பூஜை முடிந்த பிறகு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

வரும் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த சிலையை சசிகலா திறந்துவைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

ஜனவரி 22 : மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை!

இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ குடும்பம்? : நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share