அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (டிசம்பர் 5) தீர்ப்பு வழங்கியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும் துணை பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்பிறகு 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கொண்டுவரப்பட்டது.
பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் வாதங்கள் ஆர்.சுப்பிரமணியம், செந்தில்குமார் அமர்வில் மூன்று நாட்கள் நடைபெற்றது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதன்படி, அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…