மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணனை கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்ற வாகனம் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் நேற்று (ஆகஸ்டு 13) அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நள்ளிரவு அமைச்சரை பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரினார்.
மேலும், பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்து இருந்தார். திமுக தனது தாய்வீடு என்றும் சரவணன் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது சரவணனை கட்சியில் இருந்து நீக்குவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஆகஸ்டு 14) அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆகஸ்ட் 15: ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் சென்னை