தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இன்று (மார்ச் 12) சரத்குமார் இணைத்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், “வலிமையான தலைவரான மோடியுடன் சேர்ந்து செயல்பட்டால் என்ன என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பேசினேன்.
பின்னர் கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுத்துள்ளேன். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியில் தொடர்ந்த நாங்கள், தேசத்தின் நலனுக்காக பாஜகவுடன் கட்சியை இணைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!
மீண்டும் அமைச்சராகும் பொன்முடி… ஆளுநருக்கு கடிதம்?