சென்னை உயர் நீதிமன்றத்தின் 33வது புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா இன்று (மே 28) பதவியேற்றுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த எட்டு மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜா, கடந்த 24ம் தேதியுடன் பணி ஓய்வுபெற்றார். அவரைத் தொடர்ந்து மூத்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் 33வது புதிய தலைமை நீதிபதியாக, கங்காபூர்வாலாவின் பதவியேற்பு நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் ஜப்பானில் பயணம் மேற்கொண்டிக்கும் நிலையில் அவசர அவசரமாக இன்று புதிய தலைமை நீதிபதி பதவியேற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு திமுக அமைச்சர்கள் பக்கத்திலேயே இருக்கை அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
’தி கேரளா ஸ்டோரி படம் உண்மை கதையா?’: கமல் பளீர் பதில்!
’உருவமைப்பில் மட்டுமின்றி’: புல்லட் ரயில் குறித்து முதல்வர் ட்விட்!