சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது!

Published On:

| By Aara

சிவசேனா கட்சியின் தலைவர்  உத்தவ் தாக்கரே ஆதரவாளரும் மூத்த எம்பியுமான  சஞ்சய் ராவத்தை அமலாக்கத்துறை  இன்று (ஜூலை 31) பிற்பகல்  கைது செய்துள்ளது.

இன்று காலை 7 மணிக்கு மும்பை கிழக்கு புறநகரில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டுக்கு  பத்ரா சாவ்ல் நில ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கு சென்றனர். காலை  7 முதல் வீட்டில்  ஒரு பக்கம்  சோதனை, மறுபக்கம் ராவத்திடம் விசாரணை என நீடித்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ராவத்  அமலாக்கத்துறை முன் ஆஜரானார். ஆனால் அண்மையில் அனுப்பப்பட்ட அமலாக்கத்துறையின் சம்மனுக்கு, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை காரணம் காட்டி ஆஜராகாமல் தவிர்த்தார்.

இந்த நிலையில்  இன்று விசாணையை அடுத்து பிற்பகல் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அறிந்து சிவசேனா தொண்டர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். பால்கனிக்கு சென்று தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார் ராவத். அவரது சில இடங்களுக்கு அமலாக்கத்துறை சீல் வைத்துள்ளது.

பாஜகவை கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தவர் ராவத் என்பது குறிப்பிடத் தக்கது.

.-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel