செப்டம்பர் 2-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் வினித் ஜிந்தால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிருதா போஸ், பெலா எம் திரிவேதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, “விளம்பரத்திற்காக பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மம் தொடர்பான மற்றொரு வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் சவுத்ரி ஆஜராகி, தமிழக அரசு தரப்பு வாதத்தை மறுத்தார். மேலும், “சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அரசால் இனப்படுகொலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்
அப்போது குறுக்கிட்ட ஆனந்த் திவாரி, மிகவும் துரதிருஷ்டவசமான கருத்துக்களை நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பு பயன்படுத்துவதாக தெரிவித்தார்
சனாதனம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 வழக்குகளும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்
செல்வம்
அதிமுக பாஜக கூட்டணி விலகல் நிரந்தரமா? – பிரேமலதா கேள்வி!
சனாதனம் குறித்த பாடம் நீக்கப்படுமா? – அன்பில் மகேஷ் பதில்!