சனாதன பேச்சு: ஆதாரங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Selvam

sanatana dharma madras high court

சனாதனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி பேசியதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க இந்து முன்னணி நிர்வாகி கிஷோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 6) உத்தரவிட்டுள்ளது.

சனாதனம் பற்றி விமர்சித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

எம்.பி ஆ.ராசா, அமைச்சர்  உதயநிதி, தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. எந்த விதிமீறலிலும் அமைச்சர்கள் ஈடுபடவில்லை. அவர்களது பேச்சு தொடர்பான எந்த விவரங்களும் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

சேகர்பாபு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி, “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும். இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்ற வேண்டும்” என்று வாதிட்டார்.

இதனை தொடர்ந்து , நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஆகியோர் சனாதனம் குறித்து பேசிய வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 11-ஆம் தேதிக்கு நீதிபதி அனிதா சுமந்த் ஒத்திவைத்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவி நிற வந்தே பாரத் – காரணம் என்ன?: அமைச்சர் விளக்கம்!

சொத்து வரி 1% அபராத தொகையை ரத்து செய்க: எடப்பாடி வலியுறுத்தல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel