சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்திற்கு விரைவாக தீர்வுகாணுமாறு அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 5) அறிவுறுத்தியுள்ளார்.
தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்கக் கோரி கடந்த 4 வாரங்களுக்கு மேலாக காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் லெனின்னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி ஆகியோரின் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வுக்கானுமாறுமற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரிடம் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
போராட்டம் நடத்தும் சாம்சங் தொழிலாளர்களுடன் வரும் திங்கக்கிழமை அன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வனிதா 4-வது திருமணம் செய்யவில்லை… எதற்காக அப்படி செய்தார்?
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – வானிலை மையம் அப்டேட்!
“சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது”: ஆளுநர் ரவி