முலாயம் சிங் யாதவ் காலமானார்!

அரசியல்

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் உடல் நலக் குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (அக்டோபர் 10) காலமானார்.

முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஐசியுவுக்கு மாற்றப்பட்டார்.

நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை அவர் காலமானதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

பிரியா

வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் காலமானார்!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்ககத்தில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published.