புதிய நிர்வாகிகள்: எடப்பாடி மாவட்டத்தில் கைவைத்த பன்னீர்

அரசியல்

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றோர் அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர்.

அதிமுக விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலும் உள்ளது.

இதனால், இருவரும் தனித்தனியாக அதிமுக நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை,

நேற்று (அக்டோபர் 10) சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்தியிருந்தார்.

அதுபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் தன்னுடைய ஆதரவாளர்களுடன்,

நேற்று (அக்டோபர் 10) சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடத்தியிருந்தார்.

இதில் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலிருந்து அதிகம் பேர் வந்திருந்தனர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் புதிய மாவட்டக் கழகச் செயலாளர்களை ஓ.பன்னீர்செல்வம் நியமித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நிர்வாக வசதியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் கள்ளக்குறிச்சி வடக்கு,

என இரண்டு மாவட்டங்களாக இன்றுமுதல் (அக்டோபர் 11) செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் அதிமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக (கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை) க.வேங்கையனும்,

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக (ரிஷிவந்தியம், திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிகள்) டி.என்.பாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, சேலம் மாநகர், சேலம் புறநகர் எனக் கழக ரீதியாக செயல்பட்டு வந்த இரண்டு மாவட்டங்கள், நிர்வாக வசதியை முன்னிட்டு…

சேலம் மாநகர், சேலம் புறநகர் மேற்கு, சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மத்திய மற்றும் சேலம் புறநகர் வடக்கு என ஐந்து மாவட்டங்களாக இன்றுமுதல் செயல்பட அனுமதிப்பட்டுள்ளது.

சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக (சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிகள்) என்.தினேஷ்,

சேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக (எடப்பாடி, சங்ககிரி சட்டமன்றத் தொகுதிகள்) எடப்பாடி பி.ஏ.இராஜேந்திரன்,

சேலம் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக (ஆத்தூர், கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிகள்) ஏ.பெரியசாமி,

சேலம் புறநகர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளராக (வீரபாண்டி, ஏற்காடு சட்டமன்றத் தொகுதிகள்) எம்.ஜெய்சங்கர்,

சேலம் புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக (மேட்டூர், ஓமலூர் சட்டமன்றத் தொகுதிகள்) என்.ராஜ்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

கொடநாடு வழக்கு : ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு!

சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் 2ஆவது கடிதம்!

+1
1
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *