Sad to see minister explanation liquor sale morning

காலையில் மது: அமைச்சர் விளக்கம்… அண்ணாமலை வருத்தம்!

அரசியல்

காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி நேற்று(ஜூலை 17) கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,”சிலர் காலையில் மது அருந்த வேண்டும் என்று சொல்கின்றனர். காலையில் மது அருந்துபவர்களை  குடிகாரன் என்று சொன்னால் என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது.

தவிர்க்க முடியாத காரணங்களாலேயே கடுமையான பணி செய்வோர் காலையில் மது அருந்துகின்றனர்” என்று கூறினார்.

இந்நிலையில், இதுகுறித்த பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

‘காலையிலேயே ஏன் மது விற்பனை செய்ய வேண்டும் என்ற ஆய்வுக்கு, அமைச்சர் முத்துசாமி ஊடகங்களில் கொடுத்த விளக்கம் கண்டு மிகுந்த வருத்தப்படுகிறேன்.

தூய்மைப் பணியாளர்கள், கைகளால் சாக்கடைக் கழிவுகளை அகற்றும் நிலையை மாற்ற, மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, அதற்கான தீர்வு காலையில் மது விற்பது அல்ல.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 425, தமிழகத்தில், தூய்மைப் பணியாளர்கள், கைகளால் கழிவுகள் அகற்றுவதைத் தடை செய்துள்ளதாகக் கூறுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் மட்டும் பணியின்போது 56 தூய்மைப் பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் அமைச்சரோ, கைகளால் கழிவுகள் அகற்றும் பணியில், மது அருந்திவிட்டு ஈடுபடச் சொல்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

தூய்மைப் பணியாளர்கள் புனர்வாழ்வுக்கு, மத்திய அரசு, குடும்பத்தில் ஒரு தூய்மைப் பணியாளருக்கு ரூபாய் 40,000, தூய்மைப் பணியாளர் குடும்பத்தினர் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு,

இரண்டு வருடங்களுக்கு, மாதம் ரூபாய் 3000, தூய்மைப் பணி தொடர்பான சுயதொழில் தொடங்க ரூபாய் ஐந்து லட்சம் வரை மானியம், மருத்துவக் காப்பீடு, தூய்மைப் பணியாளர் மரணங்களைத் தடுக்க, நமஸ்தே திட்டம் என பல திட்டங்கள் தீட்டி, ஆண்டுதோறும் பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது.

இந்தத் திட்டங்களை இது வரை பயன்படுத்தாமல் இருக்கும் தமிழக அரசு, சாராய விற்பனையைப் பெருக்குவதில் கவனத்தைச் செலுத்தாமல், மத்திய அரசின் தூய்மைப் பணியாளர்களுக்கான நலத் திட்டங்களை அவர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக கேட்டுக் கொள்கிறேன்”என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

ஆட்சியர் அலுவலகத்துக்கு பாடையுடன் வந்த கிராம மக்கள்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *