பிரச்சாரத்தில் கலக்கிய சபா(ஷ்) ராசேந்திரன்

அரசியல்

நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற திமுக தலைமை கடுமையான பிரச்சாரங்களை செய்தது. இதனால் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் தீயாய் வேலை செய்து வந்தனர்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலேயே வன்னியர் வாக்குகள் அதிகமாக உள்ள தொகுதி கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய நெய்வேலி சட்டமன்றத் தொகுதிதான்.

இந்தத் தொகுதியில் வன்னியர் வாக்குகள் 50.14% சதவீதமும், தலித் வாக்குகள் 31.17% சதவீதமும் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியின் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினரான எம்.எல்.ஏ சபா ராசேந்திரன் தனது தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றுக் கொடுப்பதற்காக பல திட்டங்களை போட்டு வேலை செய்தார். அதில் குறிப்பாக பாமக வாக்குகளான வன்னியர் வாக்குகளை குறிவைத்து வன்னியர்கள் அடர்த்தியாக உள்ள ஊர்களைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்று தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

தொகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் கடந்த மூன்று வருடங்களில் என்னென்ன செய்து இருக்கிறோம் என்ற பட்டியலை கையில் எடுத்துக்கொண்டு, தனிநபர்களாக யார் யாரெல்லாம் பலனடைந்திருக்கிறார்கள் என்று பட்டியல் போட்டு பேசி வாக்குகளை உறுதி செய்து வந்திருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மருங்கூர், கீழக்குப்பம், நடுக்குப்பம் உட்பட ஐந்து ஊராட்சிகளுக்குச் சென்று கூட்டணி கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பெண்கள் ஆகியோரை அழைத்து பொறுமையாகப் பேசினார்.

எம்.எல்.ஏ சபா ராசேந்திரன் பேசும்போது, ”மருங்கூர் ஊராட்சியில் 5,17,76,835 ரூபாய் நிதியில் சாலைகள், போர்வெல், கட்டிடம் கட்டிக் கொடுத்திருக்கிறேன், கீழக்குப்பத்தில் 1,72,61,269 ரூபாய், நடுக்குப்பத்தில் 3,17,52,997 ரூபாய் மதிப்பில் சாலை, போர், பம்புசெட் போட்டுக் கொடுத்துள்ளேன்” என்று சொன்னதுடன், கடந்த மூன்று வருடங்களில் அதேபோல் தனிநபர்களுக்கு என்னென்ன செய்தேன் என்றும் பட்டியல் இட்டுச் சொல்லியிருக்கிறார்.

அத்துடன் உங்களுக்கு அனைத்து சலுகைகளும் வீடு தேடி வரும் என்று ஊர் ஊராக ஊர்கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்திருக்கிறார் சபா.

மேலும் தனது சட்டமன்றத் தொகுதியில் உள்ள கூட்டணிக் கட்சி நிர்வாகிகளையும், பூத் கமிட்டியில் உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள சிறப்பான பூஸ்ட்களை கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளார் சபா ராசேந்திரன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் தகுதி நீக்கமா?

எந்த கட்சிக்கு எத்தனை சீட்?..ஒவ்வொரு கட்சிகளின் வாக்கு சதவீதம்…40 தொகுதி சர்வே ரிசல்ட்!

திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர்…மண்டல வாரியாக செல்வாக்கு யாருக்கு? மெகா சர்வே ரிசல்ட்!

2024 மக்களவைத் தேர்தல்: ஓய்ந்தது பிரச்சாரம்!

+1
0
+1
0
+1
0
+1
9
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *