எஸ்.பி. வேலுமணி வழக்கு : நாளை தீர்ப்பு!

அரசியல்

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரிய எஸ்.பி. வேலுமணி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை (நவம்பர் 30) தீர்ப்பு வழங்க உள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது மாநகராட்சி டெண்டர் முறைகேடு, சொத்துக் குவிப்பு தொடர்பாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் எஸ்.பி. வேலுமணி தன் மீதுள்ள டெண்டர் முறைகேடு வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.பி. வேலுமணி தரப்பில் ஒளிவு மறைவின்றி டெண்டர் கோரப்பட்டது. இதில் தனக்கு எந்த பங்கும் இல்லை எனவும் இது தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு மட்டுமே அனுமதி கோரப்பட்டதாகவும் வழக்கு பதிய அனுமதி பெறவில்லை என்று வாதிப்பட்டது.

அரசு தரப்பில், டெண்டர் முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மத்திய கணக்கு தணிக்கைக்குழு அறிக்கை வெளியானது. அதில் ஒப்பந்தங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை என்பது வழக்கின் ஆரம்பக்கட்டம் என்றும் ஆரம்பக்கட்டத்திலேயே வழக்கை ரத்து செய்ய முடியாது என்று வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் அறப்போர் இயக்கம் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் மாதம் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி, எஸ்.பி. வேலுமணி வழக்கு கடந்த நவம்பர் 8 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், கோவையில் 47 டெண்டர்கள் அமைச்சரின் உறவினர்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன என அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் எஸ்.பி. வேலுமணி வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் எஸ்.பி. வேலுமணி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றம் நாளை (நவம்பர் 30) தீர்ப்பு வழங்கவுள்ளது.

மோனிஷா

மைசூர் டூ ராமேஸ்வரம்: அம்மாவிற்காக 4 ஆண்டுகள் ஆன்மிக பயணம்!

கத்தார் : குவியும் ரசிகர்கள்… கொடுமையில் ஒட்டகங்கள்… பீட்டா யார் பக்கம்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *