டெண்டர் முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எஸ்.பி. வேலுமணி மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சென்னை மாநகராட்சியிலும், கோவை மாநகராட்சியிலும் முறைகேடாக டெண்டர்களை வெளியிட்டதாகவும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு மற்றும் டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி. வேலுமணி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் முகாந்திரம் உள்ளது. ஆதலால் எஸ்.பி.வேலுமணி வழக்கை ரத்து செய்ய முடியாது எனத் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எஸ்.பி. வேலுமணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் போது, தங்கள் தரப்பைக் கேட்க வேண்டும் எனத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது.
மோனிஷா
டிசம்பர் 28: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்