உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த ஏவுகணை, அண்டை நாடான போலாந்து நாட்டில் விழுந்து வெடித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் எல்லைக்கு அருகே உள்ள கிழக்கு போலாந்து நாட்டில் உள்ள ப்ரெஸ்வோடோ கிராமத்தில் ஏவுகணை நேற்று விழுந்து வெடித்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தனது நாட்டு மக்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து ரஷ்ய தூதருக்கு போலாந்து வெளியுறவு அமைச்சர் சம்மன் அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து போலாந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா, தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கக் குழுவின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோ விசாரணை!
மேலும் நேட்டோ கூட்டணியில் உள்ள போலாந்து விடுத்துள்ள கோரிக்கையின் அடிப்படையில், இன்று நேட்டோ தூதர்கள் ஏவுகணை விழுந்த பகுதியில் ஆய்வு செய்ய உள்ளனர்.
நேட்டோ இராணுவ கூட்டணி ஒப்பந்தத்தின் 4 வது பிரிவின் கீழ், உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள், பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தால், அதிகாரப்பூர்வமாக நேட்டோ விசாரணையில் இறங்கும்.
இதுகுறித்து பேசிய நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், ”போலந்து ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவிடம் தாக்குதலில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன்.
நேட்டோ நிலைமையை கண்காணித்து வருகிறது மற்றும் நட்பு நாடுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.” என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: ஜி-20 மாநாட்டில் மோடி
பிரியா மரணத்திற்கு காரணம்: அரசு மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்!