ரஷ்யாவின் போர் நிறுத்த அழைப்பும் தொடர் தாக்குதலும்!

அரசியல்

இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் கிறிஸ்துமஸ் – ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்களால் டிசம்பர் 25 அல்லது ஜனவரி 7ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

இந்த ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக நேற்று (ஜனவரி 6) நண்பகல்  இன்று (ஜனவரி 7) நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என புதின் தெரிவித்தார்.

ரஷ்யாவின் இந்தப் போர் நிறுத்த அழைப்பை உக்ரைன் நிராகரித்த நிலையில் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்குதலைத் தொடங்கியது.

போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஓராண்டை நெருங்கி விட்டாலும் இன்னும் சண்டை முடிவுக்கு வரவில்லை.

உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகள் செய்து வருவதால் உக்ரைன் வீரர்களும் ரஷ்யாவை எதிர்த்து சளைக்காமல் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைனில் ஆர்த்தாடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி 36 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார்.

உக்ரைன் மக்கள் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துமஸை சிறப்பாக கொண்டாடுவதற்கு வசதியாக நேற்று நண்பகல் முதல் இன்று நள்ளிரவு வரை 36 மணி நேரம் போர் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Russia shell East Ukraine

இது தொடர்பாக ரஷ்ய வீரர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆனால், இந்தப் போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் நாட்டு அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ போடாலியா, “உக்ரைனில் ரஷ்யா பிடித்து உள்ள பகுதிகளை விட்டு முதலில் வெளியேற வேண்டும். அப்போதுதான் அது தற்காலிக போர் நிறுத்தமாக இருக்கும்.

போர் முடிவு பிரகடனம் ரஷ்யாவின் தந்திரமாகும். போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ரஷ்யாவின் சூழ்ச்சி முயற்சிக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளன. கிழக்கு உக்ரைனில் உள்ள முன்னணி நகரமான பாக்முட்டில் ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும்,

பாக்மூட்டில் இருந்தும் எதிர் தரப்பினரை நோக்கி ஷெல் குண்டுகள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தத் தாக்குதலில் குடியிருப்பு கட்டடம் சேதமடைந்ததாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

-ராஜ்

மது விற்பனையை ஆறு மணி நேரமாகக் குறைக்க வேண்டும்: ராமதாஸ்

இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வீர்களா?: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *