உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருவதால் ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையம் மற்றும் உக்ரேனிய மின் அமைப்புக்கு இடையேயான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் பாதுகாப்பு படை தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்தப் போரில் இருதரப்பிலும் பெருத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.
உக்ரனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் நோக்கில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்ய ராணுவம் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “பொதுமக்களை அச்சுறுத்தும் நோக்கில் ரஷ்யா செயல்பட்டு வருகிறது. அவர்களின் திட்டம் பலனளிக்காது. தங்கள் செயல்களுக்கு ரஷ்யா பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் உக்ரைனில் இரவு முழுவதும் பல்வேறு பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையம் மற்றும் உக்ரேனிய மின் அமைப்புக்கு இடையேயான கடைசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் உக்ரைனில் உள்ள ஜப்போரிழ்ழியா அணுமின் நிலையத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், அதற்கு மாற்றாக, தற்போது டீசல் ஜெனரேட்டர்களில் அணுமின் நிலையம் இயங்குவதாகவும் அந்நாட்டின் அணுசக்தி ஆபரேட்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பாஜகவின் சிறை அரசியல்: வைரலாகும் மணீஷ் சிசோடியாவின் கடிதம்