கே.எஸ்.அழகிரியை கண்டித்து ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் போராட்டம்!

அரசியல்

திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கே.எஸ்.அழகிரியை கண்டித்து ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் இன்று (நவம்பர் 25) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கே.எஸ்.அழகிரி தலைமையில் திருநெல்வேலி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று பாக முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனை கே.எஸ்.அழகிரி புறக்கணிப்பதாகவும் கூறி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெண்கள் இன்று கருப்பு உடை அணிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநில மகளிரணி பொதுச்செயலாளர் குளோரிந்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் தான் அதிக அளவில் 29 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். கட்சியை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்ல எங்கள் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஊக்கப்படுத்தினார்.

பூத் கமிட்டி, வட்டார தலைவர் பதவி வழங்குவதில் உழைத்தவர்களுக்கு பொறுப்பு கொடுக்கவில்லை. இதனை எதிர்த்து மாநில தலைவரை சந்தித்து முறையிட்டோம். அவர் எங்கள் கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் அவர் திருநெல்வேலிக்கு வந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். கே.எஸ்.அழகிரியை மாநில தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை சொல்வது என்ன?

பியூட்டி டிப்ஸ்: சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *