மூன்று மாவட்டங்களில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ்.பேரணி!

Published On:

| By Jegadeesh

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூரில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்று வருகிறது

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50 க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இன்று( நவம்பர் 6 ) ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நேற்று அனுமதி அளித்தது.

ஆனால் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் என 11 நிபந்தனை விதித்தது.

இந்நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த முடிவு செய்தது. இதனால் பேரணி நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சசிகலாவின் மழை நிவாரணம்: தடுத்து நிறுத்திய ஸ்டாலின்

ஆர்.எஸ்.எஸ்.பேரணி: மத்திய அரசுக்கு பயந்த ஐபிஎஸ் அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share