மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2 ) ஆம் தேதி புதுச்சேரியில் அரசு அனுமதியுடன் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கலந்துகொண்டனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். சார்பில் தமிழகத்தில் இன்று(அக்டோபர் 2) அணிவகுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு முதலில் தமிழக அரசு தரப்பில் அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை மறுத்துவிட்டது.
பின்னர், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், புதுச்சேரி அரசில் பாஜக அங்கம் வகிக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று (அக்டோபர் 2) மாலை 4 மணிக்கு பேரணி தொடங்கியது.
காமராஜர் சாலையில் தொடங்கிய இந்த பேரணியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன், எம்பி செல்வகணபதி மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை கண்டித்து திமுக தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் காங்கிரஸ் , மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஸ்ப்ரே ஆடை: அமெரிக்க மாடலின் அசத்தல் ரேம்ப் வாக்!
போனில் ’ஹலோ’ சொல்லக் கூடாது, ’வந்தே மாதரம்’தான்: அரசு உத்தரவு!