மனித சங்கிலி போராட்டத்தில், ’மதவாதத்தை முறியடிப்போம்’ என்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன.
மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும்,
சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் விசிக, சிபிஐ (எம்), சிபிஐ ஆகிய கட்சிகள் கடந்த அக்டோபர் 2ம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்த தமிழக காவல் துறையிடம் அனுமதி கேட்டிருந்தன.

அப்போது மாநிலத்தில் நிலவிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையால் காவல் துறை அனுமதி வழங்கவில்லை.
அதேநேரத்தில், அக்டோபர் 11ம் தேதி நடத்த அனுமதி வழங்கியிருந்தது. இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்துக்கு அதிமுக மற்றும் திமுக தவிர 24 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதையடுத்து, இன்று (அக்டோபர் 11 ) தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தில் கலந்து பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். சென்னை அண்ணாசாலையில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ”ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத கூட்டத்தை வேரறுப்போம்” என்ற கோஷத்தை முன்வைத்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமித் ஷா அறிக்கை: மொழிப்போர் வெடிக்கும்-சீமான் எச்சரிக்கை
போன வருடம் ட்விட்- இந்த வருடம் விசிட்: தேவர் குருபூஜையில் மோடி?