மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்தது என்ன? – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

Published On:

| By Selvam

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் பதவி குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஆகஸ்ட் 16) தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி,

“தேர்தலில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்தும், வரும்காலத்தில் திமுக எப்படி பணியாற்ற வேண்டும் என்றும் வெளிநாடு செல்வதற்கு முன்பாக மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

கலைஞர் இருக்கும்போது ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் வெற்றி மமதையில் இருக்கக்கூடாது, மக்களை எளிதில் அணுகக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பதவி வரும்ப்போது தான் பணிவு வரவேண்டும், வாக்களித்துவிட்டார்கள் என்பதற்காக தலை கால் தெரியாமல் புரியாமல் ஆடக்கூடாது. அடக்கத்தோடு இருந்து மேலும் வெற்றிகளை தேடுவதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கலைஞர் பாணியில் ஸ்டாலின் அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

துணை முதல்வர் பதவி குறித்து எதுவும் ஆலோசிக்கவில்லை. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும் எதுவும் ஆலோசிக்கப்படவில்லை” என்றார்.

தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் நிர்வாக திறனற்ற திமுக அரசு என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “திமுகவை பற்றி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் என்றால், திமுக சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்” என தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share Market : வாரத்தின் கடைசி நாள்… ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த EOS-08 செயற்கைக்கோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share