ரூ. 14,000 கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மார்ச் 21) தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக, “2022-23 ஆம் ஆண்டில் இதுவரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இது கடந்த பத்தாண்டு சராசரியை விட 89 சதவீதம் அதிகமாகும்.
வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும்.
அதுபோல ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டி இல்லா கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
வேளாண் பட்ஜெட்: “விவசாயிகளுக்கு கண்ணாமூச்சி விளையாட்டு”: எடப்பாடி