மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்துக்குப் பதிலளித்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
2022-2023 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூலை 10) வழங்கினார்.
சேப்பாக்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் உதயநிதி ஸ்டாலின்.
ஆளுநருக்கு எதிராகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் இந்த கடிதத்துக்குப் பதிலளிக்கவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, “முதல்வர் முடிவெடுப்பார்” என்று பதிலளித்தார் உதயநிதி.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கிராமப்புறங்களில் அரசு சார்பில் வழங்கக் கூடிய இலவச மிதிவண்டிகளை விற்பனை செய்யாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்” என்றார்.
மகளிர் உரிமைத் தொகை 80 சதவிகித பெண்களுக்குக் கிடைக்காது என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “9 ஆண்டுகளுக்கு முன்னால் ஏழை மக்களுக்கு ரூ.15 லட்சம் கொடுப்பார்கள் என்று வாக்குறுதி கொடுத்தார்களே. 15 ரூபாயாவது கொடுத்தார்களா. இதையெல்லாம் கேட்பதற்கு அருகதை வேண்டும்” என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின்.
பிரியா
ஷாருக்கானின் ஜவான்: டிரெய்லர் எப்படி இருக்கு?