காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதையொட்டி காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் தேர்தல் பணிகளைச் செய்து வருகிறது. இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இளைஞர்களைக் கவரும் வகையில், 30 லட்சம் அரசு வேலை, ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன் தொழில் பயிற்சி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டது.
தற்போது பெண்கள் வாக்குகளைப் பெறும் வகையில் 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்ரா நிகழ்வின் பொதுக்கூட்டத்தில் இன்று (மார்ச் 13) பேசிய ராகுல் காந்தி 5 வாக்குறுதிகளை அறிவித்தார்.
அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
மத்திய அரசு வேலைகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
வேலைக்குச் செல்லும் பெண்களின் வசதிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சாவித்ரிபாய் புலே பெயரில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண்களின் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும் வகையில் சிறப்புப் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்.
ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவு செய்யும் பெண்களின் சம்பளத்தில் மத்திய அரசின் பங்களிப்பை இரட்டிப்பாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார் ராகுல் காந்தி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பாஜகவில் இணைந்ததை விமர்சிப்பதா? – சரத்குமார் காட்டம்!
Movies: இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட ‘டாப் 8’ படங்கள்… முதலிடம் யாருக்கு?