RN Ravi withdrawn the Vice-Chancellor Search Committee

துணைவேந்தர் தேடுதல் குழு: திரும்ப பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி

அரசியல்

RN Ravi withdrawn the Vice-Chancellor Search Committee

பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் தான் அமைத்த 3 தேடுதல் குழுக்களை உச்சநீதிமன்ற உத்தரவுபடி திரும்ப பெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜனவரி 9) அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும்,  இடையே பல்வேறு விவகாரத்தில் தொடர்ந்து மோதல்போக்கு நிலவுகிறது.

நீட் மசோதாவை ஏற்றுக்கொள்ளாததில் தொடங்கி, சிறப்பு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு இன்னும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து உள்ளது.

முக்கியமாக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் ரவி – தமிழ்நாடு அரசு இடையே மோதல் நிலவி வருகிறது. பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி உள்ளது. ஆனால் அதை ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம்  நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு நடந்தது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அந்த மாநாட்டிற்கு  அப்போது உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி அழைக்கப்படாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர்களை தேர்வு செய்ய மூன்று குழுக்களை அமைத்து ஆளுநர் ரவி உத்தரவிட்டார்.

இதில் தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி யுஜிசி சார்பில் உறுப்பினரையும் இந்தக் குழுக்களில் நியமிக்கப்பட்ட நிலையில் துணைவேந்தர் பணியிடங்களுக்கு மூவரது பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்ந்தெடுக்க, ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து அதே செப்டம்பர் இறுதியில் புதிய குழு அமைத்து அரசிதழிலும் வெளியிட்டது.  எனினும் தான் அமைத்த குழுக்களை நீக்காமல் இருந்து வந்தார் ஆளுநர்.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம் முதல்வர் மு.க.ஸ்டாலினும், ஆர்.என்.ரவியும் சந்தித்து பேச வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

அதன்பேரில் இருவரும் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி சந்தித்து பேசிய நிலையில், இன்று தான் அமைத்த பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்காக தான் அமைத்த 3 தேடுதல் குழுக்களை உச்சநீதிமன்ற உத்தரவுபடி திரும்ப பெற்றுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

மேலும் மாநிலத்திலுள்ள பல லட்சம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து உரிய நடவடிக்கையை விரைவில் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… தொடரும் பிரச்சினை: நீதிமன்றம் உத்தரவு!

”தேவாலயத்திற்குள் வரக்கூடாது”… தடுத்து நிறுத்திய இளைஞர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்!

Video: முஹமது ஷமி, வைஷாலிக்கு ‘அர்ஜுனா விருது’ வழங்கி கவுரவம்!

RN Ravi withdrawn the Vice-Chancellor Search Committee

+1
1
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *