நாம் கேட்டாலோ அல்லது தொழில் நிறுவனங்களைச் சந்தித்து பேசினாலோ முதலீடுகளை பெற முடியாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நேற்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில் ஆர்.என்.ரவி பேசும்போது, “உலகளாவிய சூழ்நிலைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் புவிசார் அரசியல் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவிலிருந்து தங்களது உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றியிருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தான் அவர்களை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு தொழில் நிறுவனங்களை அமைக்க வழிவகை செய்துள்ளது. அதற்கான தொழில் கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கியுள்ளது.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சூழலை உருவாக்கினால் தான் அதிக முதலீடுகளை பெற முடியும். நாம் கேட்டாலோ அல்லது தொழில் நிறுவனங்களை சந்தித்து பேசினாலோ முதலீடுகளை பெற முடியாது. அவர்கள் அதிகம் பேரம் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். அந்நிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் மிகச்சிறிய மாநிலமான ஹரியானா தமிழகத்திற்கு நிகராக உள்ளது. திறமையான தகுதி வாய்ந்த மனித வளத்தை நாம் உருவாக்கினால் மட்டுமே தொழில் முதலீடுகளை பெற முடியும்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு சரிந்து வரும் உலக பொருளாதாரத்தை மீட்பதற்கான என்ஜினாக இந்தியா செயல்பட்டு வருகிறது என்று பல உலக நாடுகள் தெரிவித்துள்ளன. உலகளவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் உள்ள மாணவர்களை திறமையான எதிர்கால சவால்களை சந்திக்கக்கூடியவர்களாக உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
தற்கொலைக்கு முயன்ற பெண் எஸ்.ஐ… பதறிய போலீஸார்- பின்னணி என்ன?
பெரம்பலூர்: சினிமா பட இயக்குநர் வெட்டிக்கொலை!
வெளிநாட்டு முதலீடு பற்றி பேச காரணம் ஸ்டாலின் வெளிநாடு பயணம்… இவரு பேச்செல்லாம் ஒரு பேச்சா…