ஆளுநர் மனநோயாளி போன்று செயல்படுகிறார்: திருமாவளவன்

அரசியல்

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்ட ஆளுநரின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போன்று உள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தற்போது அமலாக்கத்துறை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

இந்நிலையில் செந்தில்பாலாஜி அமைச்சரவையில் தொடர்ந்தால் அரசு இயந்திரத்தின் செயல்பாடு பாதிக்கப்படும்.

மேலும் அவர் மீது நிலுவையில் இருக்கும் ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகளை சுட்டிக்காட்டி தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளார்.

ஆளுநரின் இந்த முடிவு பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில், “ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது.

அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?

அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியது ஏன்?

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி சங்கர் ஜிவால்

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *