கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சட்டப் பேரவையில் தமிழகத்தில் ஆன்லைன் தடுப்பு சட்ட மசோதா இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறார்.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் சூதாட்டத்தால் ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாமக மூத்த நிர்வாகிகளைச் சந்தித்து 2026சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்துக் கலந்துரையாடி வருகிறார் அன்புமணி ராமதாஸ்.
அந்த வகையில், இன்று நாகை மாவட்டத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, “ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்குக் கையெழுத்திட இன்று கடைசி நாள் என்பதால் ஆளுநர் இன்றைக்குள் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தும், தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல.
மேலும் தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “ இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213(2)(ஏ)-இன்படி சட்டப்பேரவை கூடிய நாளில் இருந்து 6வாரங்களில் அவசரச் சட்டம் காலாவதியாகி விடும். அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூடி இன்றுடன் 6வாரங்கள் நிறைவடைவதால் அவசரச்சட்டம் காலாவதியாகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தடை காலாவதியானால் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும்.
தமிழ்நாட்டில் கடந்த 15மாதங்களில் 32பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைத் தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தடை மிகவும் அவசியம்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் சட்டப்பேரவையில் இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்த ஆளுநரின் ஐயங்களுக்கும் அரசு தெளிவானபதில் அளித்திருக்கிறது. அதை ஏற்று ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை: மற்ற கடற்கரையில் எப்போது?