செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்புவிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
மே 14-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியபாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 15-ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார். கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில், விஷச்சாரயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்புவிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், விஷச்சாரய வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் எடுக்கபட்ட நடவடிக்கைகள் என்ன இந்த வழக்கில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் விஷச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது. அதனை தடுப்பதற்காக தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“நான் ராஜினாமா செய்ய வேண்டுமா” : செந்தில் பாலாஜி பதில்!
மின்வெட்டு- மின்தடை: செந்தில் பாலாஜி விளக்கம்!
ஆன்லைன் ரம்மி விளையாடியும் தான் மக்கள் இருந்துள்ளார்கள் அது பற்றி மாண்புமிகு கவர்னர் அவர்கள் விளக்க அறிக்கை அளிப்பாரா?