ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததைத் தொடர்ந்து அத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதன் பிறகு டெல்லி சென்று திரும்பிய இளங்கோவனுக்கு கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட அவர் உடனடியாக சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். உடல் நிலை சீரான அவரை கடந்த சில நாட்களாக சாதாரண வார்டில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
முழுமையாக குணம் அடைந்ததால் இன்று(ஏப்ரல் 6) ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவர் அங்கிருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள்!
“திருச்சியில் டைடல் பார்க்”: தங்கம் தென்னரசு அறிவிப்பு!