குடியரசு தினம்: ஆளுநர் வாழ்த்து!

அரசியல்

74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

74-ஆவது குடியரசு தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றுகிறார்.

இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாரதத்தின் 74-வது ஆண்டு குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், உலகெங்கும் வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில், அற்புதமான அறிவாற்றல் மற்றும் அசாதாரண தொலைநோக்குடனும் காலத்தை வென்ற அரசியலமைப்பை வழங்கிய பாபா சாகேப் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கருக்கு நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

அந்த அரசியலமைப்பு தான் ஒரு வலுவான பன்முக ஜனநாயகமாக இந்தியா வளர உதவியது.

இந்நாளில் சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மற்றும் சொல்ல முடியாத சித்ரவதைகளை அனுபவித்த துணிச்சலான வீர மகன்கள் மற்றும் மகள்களை தேசம் நன்றியுடன் நினைவு கூர்கிறது.

நம் தாய் திருநாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் அவர்கள் தங்கள் ரத்தம், வியர்வை மற்றும் தியாகங்களால் பாதுகாத்தனர்.

தீரன் சின்னமலை, புலி தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வி.வி.எஸ். அய்யர், சிங்காரவேலர், ருக்மணி லட்சுமிபதி, தில்லையாடி வள்ளியம்மை, குயிலி, சுந்தர சாஸ்திரி சத்தியமூர்த்தி,

அஞ்சலை அம்மாள் மற்றும் சுதந்திரத்துக்காக தங்களால் இயன்ற அனைத்தையும் வழங்கிய பலருக்கும் மரியாதை செலுத்துவோம்.

இந்த நாளில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, மகாகவி சுப்பிரமணிய பாரதி, வீரமங்கை ராணி வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், விருப்பாச்சி கோபால் நாயக்கர், சுப்பிரமணிய சிவா,

மாவீரன் அழகுமுத்து கோன், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை ஆகியோருக்கு நெஞ்சார்ந்த மரியாதையை செலுத்துவோம்.

இந்திய தேசிய சுதந்திர போராட்டத்தின் போது எல்லா இடர்பாடுகளுக்கும் எதிராகத் தங்களுக்குத் துணையாக நின்ற இந்தப் பெரிய மனிதர்கள் மற்றும் பெண்களின் குடும்பத்தினரை நாம் மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

செல்வம்

கிச்சன் கீர்த்தனா: உளுத்தம் சுவாலை!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *